ZoyaPatel

தேர்தல் பத்திரத்திட்டம் - ELECTORAL BONDS

Mumbai

தேர்தல் பத்திரத் திட்டம் ELECTORAL BONDS


தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் தன் அடையாளத்தை வெளிப்படுத்தாத வகையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் திட்டம் ஆகும்.





தொடக்கம்:

1. பண மசோதாவாக 2017ல் அறிமுகம்.

2. திட்டமாக ஜனவரி 2- 2018ல் தொடங்கப்பட்டது.

நோக்கம்:

1. அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் தேர்தல் நன்கொடையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவருதல்.

2. கருப்புப் பணத்தை ஒழித்தல்

தேர்தல் பத்திர அம்சங்கள்:



1. SBI வங்கி மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மட்டுமே பத்திரங்கள் வழங்கமுடியும்.

2. பத்திரங்கள் ஆண்டின் குறிப்பிட்ட 85 நாட்கள் மட்டுமே பெற முடியும். திருத்தம் 2022 ன்- படி)

3. பத்திரங்கள் ரூ 1000 ரூ 10000,1லட்சம், 10லட்சம், 1கோடி எனும் வகையில் மட்டுமே வெளியிடப்படும்.

4. நன்கொடை பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மட்டுமே பணமாக்கமுடியும்.

5. நன்கொடையாளர் வழங்கிய நாளிலிருந்து 15 நாட்களுக்குள் மட்டுமே பத்திரத்தை பணமாக்க இயலும்.

நன்கொடையாளர் தகுதிகள்:

1. இந்திய குடிமகன் / தனிநபர்

2. இந்திய நிறுவனம்

3. நன்கொடையாளர் பற்றிய தரவை வங்கிக்கு வழங்கவேண்டும்.

NOTE: தனிநபர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இணைந்து பத்திரம் பெற்று வழங்கலாம்

அரசியல் கட்சியின் தகுதிகள்:

1. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் -1951, 29(A)ன் கீழ் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கவேண்டும்.

2. கடந்த பொதுத் தேர்தல் அல்லது மக்களவை அல்லது சட்டமன்ற தேர்தல்களில் 1% வாக்கை பெற்றிருக்கவேண்டும்.

மேற்கொண்ட திருத்தங்கள்:

1. நிதிச்சட்டம் -2017

2. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் -1951, 29(C)

3. வருமான வரிச்சட்டம் -1961

4. நிறுவனங்கள் சட்டம் -2013

திட்டம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து:
      
பிப்ரவரி 15 , 2024 ART 19(1) RTI ACT 2005 மீறுவதால்
Ahmedabad