ZoyaPatel

TN BUDGET 2024- தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை -2024 -2025

Mumbai




 

நான்காம் வேளாண் நிதிநிலை அறிக்கை அம்சங்கள் – (2024-2025)

1.   நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள இலக்கியங்கள்

2.   கடந்த மூன்று ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை ஒரு பார்வை

3.   உழவர் நலன்

4.   வேளாண்மை - உழவர் நலத்துறை (வேளாண்மைத் துறை)

5.   சர்க்கரைத் துறை

6.   தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை

7.   வேளாண்மைப் பொறியியல் துறை

8.   விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை

9.   தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

10.                 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

11.                 கூட்டுறவு , உணவு , நுகர்வோர் பாதுகாப்பு

12.                 நீர்வளத்துறை

13.                 ஊரக வளர்ச்சி

14.                 எரிசக்தித் துறை

15.                 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை

16.                 பனை பொருள் வளர்ச்சி பனை மேம்பட்டு இயக்கம்

17.                 TNPSC Prelims  FACTS



I. வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள இலக்கியங்கள்:

1. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்
றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் - வள்ளுவர்

2. “ உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோராகப் ” – புறநானூறு

3. “மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கைஆழி தரித்தே அருளும்கை - சூழ்வினையை நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடுழிகாக்கும்கை காராளர் கை” - கம்பர் (திருக்கை வழக்கம்)

4. “ இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
         உழவிடை விளைப்போர் ” – சிலப்பதிகாரம் (நாடுகாண் காதை)

5. “மெய்திரி வகையின் எண்வகை உணவில் செய்தியும் வரையார்” – தொல்காப்பியர்

6. “சாரல் சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு”- குறுந்தொகை

7. “கவைக்கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் தாதெரு மறுகிற் போதொடு பொதுளிய” - புறநானூறு

8. “தொல்லது விளைந்தென நிலம் வளம் கரப்பினும்” - புறநானூறு

9. “கதிர்படு வயலின் உள்ள கடிகமழ் பொழிலின் உள்ள முதிர்பல மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள
 பதிபடு கொடியின் உள்ள படிவளர் குழியின் உள்ளமதுவள மலரிற் கொள்ளும் வண்டென மள்ளர் கொள்வாராக- கம்பராமாயணம்

10. “மல்லல் அம் தெங்கு இள நீர் பெய் பண்டியும் மெல் இலைப் பண்டியும் கமுகின் மேதகு பல் பழுக்காய்க் குலை பெய்த பண்டியும் ஒல்கு தீம் பண்டம் பெய்து ஒழுகும் பண்டியும்” - சீவக சிந்தாமணி

11. “தெங்கின் இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு” – புறநானூறு

12. “முந்துமுக் கனியின் நானா முதிரையின் முழுத்த நெய்யின்
செந்தயிர்க் கண்டங் கண்டம்
 இயிடை செறிந்த சோற்றின்”- கம்ப ராமாயணம்

13. “கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
         பழன வாளை கதூஉ மூரன்” - குறுந்தொகை

14. “அடுமகள் முகந்த அளவா வெண்ணெல் தொடிமாண் உலக்கைக் பருஉக்குற்று அரிசி  காடி வெள்ளுலைக் கொளீஇ நிழல் ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி” - புறநானூறு

15. “ பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
         உடும்பு முக முழுக்கொழு மூழ்க ஊன்றி” - பெரும்பாணாற்றுப்படை

16. “ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
   நீரினும் நன்றதன் காப்பு” – வள்ளுவர் 

17. “வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
       இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்
       குறித்துமாறு எதிர்ப்பை பெறா அமையின்
       குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து” - புறநானூறு

18. “வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன்
       கோல்நோக்கி வாழும் குடி” - வள்ளுவர்

19. “ அடிசில் வைகல் ஆயிரம் அறப்புறமும் ஆயிரம்
       கொடியனார் செய் கோலமும் வைகல்தோறும் ஆயிரம்
       மடிவுஇல் கம்மியர்களோடும் மங்கலமும் ஆயிரம்
       ஒடிவுஇலை வேறுஆயிரம் ஓம்புவாரின் ஓம்பலே ”- சீவக சிந்தாமணி


 I.         தமிழ்நாடு வேளாண்மைத்துறை (2022-2023) வரை

1.   மொத்த சாகுபடி பரப்பு உயர்வு : 152 லட்சம் ஏக்கர் லிருந்து  155 லட்சம் ஏக்கர் (2022-2023)

2.    உணவு தானிய உற்பத்தி 116 லட்சத்து 91 ஆயிரம் மெட்ரிக் டன்

3.   இரண்டு ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகள்

4.   பாசனம் பெற்ற பயிர் பரப்பு : 95 இலட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக உயர்வு.

5.   இருபோகச் சாகுபடிப் பரப்பு : 35 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கராக உயர்வு



      I.         கடந்த மூன்று ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை ஒரு பார்வை

1.   கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – 7705 கிராம ஊராட்சிகளில் செயல்படுகிறது.

2.   ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்,பசுமைக் குடில்,ஒருங்கிணைந்த பண்ணையம் போன்ற திட்டங்களுக்கு 20% கூடுதல் மானியம்.

(2022-2023) - பயனாளிகள் : 4980 விவசாயிகள்

I.         உழவர் நலன்

1.   பயிர்க் காப்பீடு: 25 இலட்சம் விவசாயிகள் 4436    கோடி ரூபாய்.

நிவாரணம்:

1.   மாண்டஸ் புயல்

2.   மிக்ஜாம் புயல்

3.   வறட்சி

4.   ஆலங்கட்டி மழை ( மார்ச் 2023 )

5.   மகசூல் இழப்பு

6.   பருவம் தவறிப் பெய்த மழை

7.   தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையில் கனமழை






      I.         வேளாண்மை - உழவர் நலத்துறை (வேளாண்மைத் துறை)

1.   முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்

2.   கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்.

3.   வேளாண் பயிர் பரப்பு விரிவாக்கம்

4.   பயிர் உற்பத்தித்திறன் உயர்த்துதல் ஊக்குவிப்புத் திட்டம்

5.   ஒரு கிராமம் ஒரு பயிர் செயல்விளக்கம்

6.   தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்

7.   மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம்

8.   கிராம வேளாண் முன்னேற்றக் குழு

9.   சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது

10.   ஆதி திராவிடர்,பழங்குடியின சிறு,குறு விவசாயிகளுக்கு 20%       கூடுதல் மானியம்.

11.   பலன்தரும் பருத்தி சாகுபடி

12.   பயிர்க்காப்பீடு திட்டம்

13.   வேளாண் மேம்பாட்டிற்கான பயிற்சிகள்



முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்:

நோக்கம் :
1. மண் வளத்தைப் பேணிக்காத்தல்
2. உயிர்ம வேளாண்மையை ஊக்கப்படுத்துதல்.

அம்சங்கள்:
1. பசுந்தாள் உர உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்தல்.

2. விவசாயிகளுக்கு மண்புழு உரப்படுக்கைகள் வழங்குதல்.

3. தமிழ் மண்வளம் இணையதளம் வழியாக மண் வள அட்டைகள் மூலம் மண்ணின் வளம் குறித்து பரிந்துரை வழங்குதல்.

4. தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் மண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுதல்.

5. வயல் சூழல் ஆய்வு மேற்கொள்ளப்படுதல்.

6. வேளாண் காடுகள் திட்டத்தின் மூலம் 10 இலட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.

7. நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் விதைகள் உற்பத்தி செய்து வழங்கப்படும்.

8. பாரம்பரிய சிறுதானியங்கள், பயறு வகைகளின் விதைகளை சேகரித்து மாநில விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்து பாதுகாக்கப்படும்.

9. வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்கப்படும்.

10. இயற்கை இடுபொருள்(பஞ்சகவ்யம், மண்புழு உரம், 
மீன் அமிலம்) தயாரித்தல் மையம் அமைக்க ஊக்குவித்தல்.

11. ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் ( பயிர் சாகுபடியுடன் கறவை மாடு, ஆடுகள் வளர்த்தல், தேனீ வளர்ப்பு).

12. தேனீ முனையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்கப்படும்.

13. தமிழ்நாட்டில் சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்குதல்.

14. 100 உழவர் அங்காடிகள் ஏற்படுத்தப்படும்.
 


கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்.

நோக்கம்:
1. தரிசு நிலங்கள் நிரந்தர சாகுபடிக்கு கொண்டுவருதல்.

2. ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்கிணறுகள் அமைத்தல்.

3. பண்ணைக் குட்டைகள் அமைத்து பாசனப் பரப்பு அதிகரித்தல்.

4. ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள் , ஊருணிகள் , கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்படுதல்.

5. 2021-2022 இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு 12525 கிராம ஊராட்சிகளில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.


வேளாண் பயிர் பரப்பு விரிவாக்கம்:

நோக்கம்:

1.   உணவுப்பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுதல்.

2.   தமிழ்நாட்டின் பயறுவகைகள், எண்ணெய்வித்துக்களுக்கான தேவையை நிறைவு செய்தல்.

அம்சங்கள்:

1.   பயறு பெருக்குத் திட்டம்.

2.   துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்.

3.   உணவு எண்ணெய் உற்பத்தி உயர்த்தும் திட்டம்

4.   சூரியகாந்தி, ஆமணக்கு, எள் சாகுபடிப் பரப்பு விரிவாக்கம்.


பயிர் உற்பத்தித்திறன் உயர்த்துதல் ஊக்குவிப்புத் திட்டம்:

நோக்கம்:

1.   உணவு தானியப் பயிர்கள், தென்னை, கரும்பு, பருத்தி , சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாட்டினை இடம்பெறச் செய்தல்.

2.   குறைந்து வரும் சாகுபடிப் பரப்பில் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து உற்பத்தித்திறனை அதிகரித்தல்.

அம்சங்கள்:

1.   விதைக் கிராமத் திட்டத்தின் மூலம் 50% முதல் 60% மானிய விலையில் தரமான விதைகள் விநியோகம்.

2.   நிதியுதவி: மத்திய - மாநில அரசு


ஒரு கிராமம் ஒரு பயிர் செயல்விளக்கம்:

நாட்டின் உண்மையான முன்னேற்றம் கிராமங்களின் வளர்ச்சியில் உள்ளது” – காந்தியடிகள்

அம்சங்கள்:

1.     ஒரு கிராமத்திற்கு ஒரு பயிர் என்று ஐந்து முதல் பத்து ஏக்கர் பரப்பில் முக்கிய பயிர்களுக்கான

1.   நிலம் தயாரிப்பு

2.     உயர் விளைச்சல் இரகங்கள் பயன்படுத்துதல். 

3.     விதை நேர்த்தி மற்றும் விதைப்பு 

4.     ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைகுறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடையேஏற்படுத்துதல்.நிரந்தரப் பூச்சிக் கண்காணிப்புத் திடல்கள் அமைக்கப்படும்.


தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்:

நோக்கம்:

1.   சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரித்தல்.

அம்சங்கள்:                சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023

1.   தொடக்கம்: 2023-24 முதல் 2027-2028 வரை 25 மாவட்டங்களைக் கொண்டு ஏற்கனவே இரண்டு சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம்:

 தொடக்கம்: 2022-2023

  நோக்கம்:

1.   வேளாண்மையில் ஒட்டு மொத்த வளர்ச்சியை அதிகரிக்கக்   கூடிய உத்திகளைச் செயல்படுத்துதல்.

அம்சங்கள்:

1.   மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள் , கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு பரிசு.

2.   மாற்றுப் பயிர் சாகுபடித் திட்டம் செயல்படுத்தப்படும்.

3.   பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்க அதிகபட்சம் 1 இலட்சம் வங்கி கடன் உதவி.


கிராம வேளாண் முன்னேற்றக் குழு:

1. பருவத்தே பயிர் செய்து உயரிய தொழில்நுட்பங்களைக் புகுத்தி, சந்தைத் திறனில் நீடித்த வளர்ச்சி அடைய உரிய ஆலோசனைகள் உழவர்களுக்கு வழங்குதல்.

சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது:

பாராட்டுப் பத்திரத்துடன் முதல் மூன்று விவசாயிகளுக்கு பரித்தொகை வழங்கப்படும்.


பலன்தரும் பருத்தி சாகுபடி:

நோக்கம்: பருத்தியில் அதிக தேவையுள்ள மிக நீண்ட இழை இரகங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல்.

அம்சங்கள்:

1.   பருத்தி சாகுபடி இயக்கத்தை அரசு செயல்படுத்தியது.

2.   சாகுபடி பரப்பு உயர்வு: 4 இலட்சத்து 27 ஆயிரம்.

3.   உற்பத்தி உயர்வு: 3 இலட்சத்து 19 ஆயிரம் பேல்கள்.

இந்தியாவின் நூல் கிண்ணம் தமிழ்நாடு



     I.         சர்க்கரைத் துறை:

       தமிழ்நாட்டில் 30 சர்க்கரை ஆலைகள் இயக்கத்தில் உள்ளன.

1.   கூட்டுறவு - 13

2.   பொதுத்துறை - 2

3.   தனியார் - 15

1.   சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை.

2.   கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்

3.   சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்



     I.         தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை

1.   வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாடு

2.   தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவித்தல்

3.   ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டம்

4.   நுண்ணீர்ப் பாசனத் திட்டம்

5.   தானியங்கி மின்னணு பாசன வசதிகள் ஏற்படுத்துதல்

6.   தோட்டக்கலைப் பண்ணை இயந்திரக் கண்காட்சி

7.   முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம்

8.   தோட்டக்கலைப் பண்ணைகள், பூங்காக்கள் அமைத்தல்

9.   மூலிகைப் பயிர் சாகுபடியை ஊக்குவித்தல்

10.                 ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டம்

11.                 மிளகாய் பயிர் ஊக்குவிப்புத் திட்டம்

12.                 பந்தல் காய்கறிகள் ஊக்குவிப்புத் திட்டம்


      I.         வேளாண்மைப் பொறியியல் துறை:

1.   வேளாண் இயந்திரமயமாக்குதல்

2.   வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைத்தல்

3.   இ- வாடகை ஆன்லைன் செயலி

4.   சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாங்கிட கூடுதல் மானியம்.

5.   நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள்

6.   பயிர்களைக் காத்திட சூரிய சக்தி மின் வேலிகள்

7.   நீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைத்தல்

      I.         வேளாண்மை விற்பனை - வேளாண் வணிகத் துறை

1.   கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பலா மதிப்புகூட்டுதலுக்கான மையம்.

2.   பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுதானியங்களுக்கான தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையம்.

3.   வேளாண் விளைபொருட்களுக்குப் புவிசார் குறியீடு.

4.   விளைபொருட்களின் விற்பனையை இணையவழி வர்த்தகத் தளங்களுடன் இணைத்தல்.

5.   பண்ணை வழி வர்த்தகத்தை ஊக்குவித்தல்

6.   சேமிப்புக் கிடங்குகளுக்கு கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் அங்கீகாரம்.

7.   புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவித்தல்

8.   வேளாண் கண்காட்சிகள்

      I.         தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

1.   ட்ரோன் தெளிக்கும் தொழில்நுட்பம்

2.   தமிழ்நாடு வேளாண் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்

3.   பல்நோக்கு சேவை மையம்

4.   மின்னணு வங்கி சேவைகள்

      I.         ஊரக வளர்ச்சி

1.   மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

2.   பண்ணை மகளிர் சுயஉதவிக் குழுக்கள்

      I.         பனை பொருள் வளர்ச்சி பனை மேம்பாட்டு இயக்கம்:

1.   47 இலட்சம் பனைவிதைகள் நடப்பட்டுள்ளன

2.   மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சியும் கருவியும் அளிக்கப்படும்.

3.   10 இலட்சம் பனை விதைகள் தோட்டக்கலை துறை மூலம் நடுதல்.


வேளாண் நிதிநிலை அறிக்கையில் - TNPSC Prelims  FACTS

1.   மொத்த சாகுபடி பரப்பு உயர்வு : 152 லட்சம் ஏக்கர் லிருந்து  155 லட்சம் ஏக்கர் (2022-2023)

2.    உணவு தானிய உற்பத்தி 116 லட்சத்து 91 ஆயிரம் மெட்ரிக் டன்

3.   இரண்டு ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகள்

4.   பாசனம் பெற்ற பயிர் பரப்பு : 95 இலட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக உயர்வு.

5.   இருபோகச் சாகுபடிப் பரப்பு : 35 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கராக உயர்வு

6.   நான்காம் நிதிநிலை அறிக்கை (2024-2025)

7.   கரும்பு பயிர் உற்பத்தியில் தேசிய அளவில் முதலிடம்

8.   ஆயக்கட்டு,இறவை பாசனப் பகுதியில் பசுந்தாள் உரம் பயிரிடுதல்.

9.   தமிழ் மண்வளம் இணையதளம் மற்றும் மண்வள அட்டை

10.        அசாடிராக்டின்,ஆடாதொடா,நொச்சி - உயிரி பூச்சிக்கொல்லி

11.         தேனீ முனையம் - கன்னியாகுமரி

12.        நம்மாழ்வார் விருது

13.        முல்லை பூங்கா - கன்னியாகுமரி - வேளிமலை

14.        மருதம் பூங்கா - தஞ்சாவூர் - திருமலைச் சமுத்திரம்

15.        சூரியத் தோட்டம் - கன்னியாகுமரி

16.        செம்பருத்தி நடவுச்செடிகள் உற்பத்தி மையம் - செங்கல்பட்டு (ஆத்தூர்)

17.         இ- வாடகை ஆன்லைன் செயலி (உழவன் செயலி)

18.        பலா மதிப்புக்கூட்டுதலுக்கான மையம் - கடலூர் (பண்ருட்டி)

19.        e – NAM

Ahmedabad