புதிய பாரதம் திட்டத்தில் எழுத்தறிவு திட்டம் அறிமுகம்
Mumbai
Ahmedabad
புதிய பாரதம் திட்டத்தில் எழுத்தறிவு தேர்வு மத்திய அரசின் புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டப்படி, நவம்பர் 10 அன்று தமிழகத்தில் தேர்வு நடைபெற்றது.
முக்கியக் குறிப்புகள்
- உல்லாஸ் ULLAS :(Understanding of Lifelong Learning for All in Society) சக்ஷர்தா காரியக்ரம் / சஐகட என்பது மத்திய அரசின் நிதியுதவி அளிக்கப்பட்ட முயற்சியாகும்.
- இது ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் (MOE) தொடங்கப்பட்டது மற்றும் இது தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உடன் இணைகிறது.
- நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதை கடந்தவர்களுக்கு எழுத்தறிவை பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசானது, புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் என்ற திட்டத்தை 2022ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
குறிக்கோள்
- முறையான பள்ளிப் படிப்பைத் தவறவிட்ட அனைத்துப் பின்னணியிலிருந்தும் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது
- 2027ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்க இந்த திட்டத்தின் கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி அளிக்கப்பட்டது.
- தமிழ்நாட்டில் 90 சதவீதத்திற்கு மேல் கல்வியறிவு பதிவாகியுள்ள மாவட்டங்களை 100% கல்வியறிவு பெற்ற மாவட்டங்களாக விரைவில் அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
TNPSC /TNPSC GROUP 4/TNPSC GROUP 2/TNPSC NOTES/TNPSC SCHOOL BOOKS/TNPSC CURRENT AFFAIRS/TNPSC GROUP1/TNPSC GROUP 1 MAINS /TNPSC DAILY NEWS/TNPSC TEST
Tags:
TN SCHEMES